Princiya Dixci / 2016 நவம்பர் 19 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ராசன்புரப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி, ஆற்று மணல் ஏற்றிய இருவருக்கு, தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம்; விதித்து, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, இன்று சனிக்கிழமை (19) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 32 வயதுடைய இருவருக்கே அபராதம்; விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும், வென்ராசன்புர ஆற்றில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியபோது, நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை, பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago