Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 28 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமான முறையில் மூதூர், மகாவலி ஆற்றுப் பிரதேசத்துக்குள் நுழைந்தமை மற்றும் அங்கு மண் அகழ்வில் ஈடுபட்டமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட சேருநுவர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.றிஸ்வான், உழவு இயந்திரப் பெட்டிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையும் வழங்கினார்.
குறித்த நபரைக் கைதுசெய்து, உழவு இயந்திரத்தையும் கையகப்படுத்திய சேருநுவர பொலிஸார், அந்நபரையும் உழவு இயந்திரத்தையும், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28)ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்ட அபராதத்தை விதித்தார்.
மகாவெலி கங்கையின் தடைசெய்யப்பட்ட ஆற்றுப்பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்தமைக்காக 10 ஆயிரம் ரூபாயும், அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றியமைக்காக 50 ஆயிரம் ரூபாயும் உழவு இயந்திரத்துக்கு 20 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்ட அதேவேளை, உழவு இயந்திரப் பெட்டிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையும் வழங்கப்பட்டது.
6 minute ago
11 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
37 minute ago
42 minute ago