Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில், அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (24) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், தோப்பூர் - அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட் அஹ்ஸான் (25 வயது) எனத் தெரியவருகின்றது.
கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலை அம்பியூலன்ஸ், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு சென்று, மீண்டும் வைத்தியசாலைக்குத் திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தோப்பூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கொண்டிருந்த மேற்படி இளைஞன் அம்பியூலன்ஸில் மோதி படுகாயமடைந்த நிலையில், மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளாரென, ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம், மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய அம்பியூலன்ஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .