Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் நடைபெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 வயதான அம்பியூலன்ஸ் சாரதியை, ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எச்.சம்சுதீன், இன்று (25) உத்தரவிட்டர்.
இந்த சாரதி, மது போதையில் வாகனம் செலுத்தியமைக்கான வைத்திய பரிசோதனைச் சான்றிதழ், பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தோப்பூரிலிருந்து மூதூருக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று (24) மாலை பயணித்துக் கொண்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக 3ஆம் வருட மாணவன் ஜே.அஹ்ஸான் (24 வயது), மேற்படி நபர் செலுத்திய அம்பியுலன்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகி, உயிரிழந்தார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago