2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘அரசியல் பழிவாங்கல் ராஜித, மங்களவுடன் முடிந்துவிடாது’

Editorial   / 2020 மே 17 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

“அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள், முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீரவுடன் முடிந்துவிடாது” என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (16) மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்றைய சூழ்நிலையில் கொரோனா அச்சத்தில் மக்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது, அரசாங்கம் தேர்தலை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுகிறது.

“சம்பிக்க ரணவக்கவுடன் ஆரம்பித்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள், சில நாள்கள் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இவர்களுடன் முடிந்துவிடாது. இந்த அரசுக்குச் சவாலாகத் திகழும் எதிர்கட்சி உறுப்பினர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள், கைதுசெய்யப்படுவார்.

“இவற்றை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது .இதனால் எமது பயணத்தை இவர்களால் நிறுத்த முடியாது.

“மேலும், நாடு இன்று மறைமுக இராணுவ ஆட்சியொன்றின் கீழ் உள்ளது. நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பதிலாக இராணுவ அதிகாரிகள், உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X