Editorial / 2019 மார்ச் 03 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
கந்தளாய் - சூரியபுர, சுண்ணக்காடு காட்டுப் பகுதிக்குள் வெள்ளை மரையொன்று மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற இராணுவத்தினர், தாயை விட்டு அநாதரவான நிலையிலிருந்த இம்மரையை மீட்டு, கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இம்மரை, ஈன்று ஒரு மாத காலமாக இருக்கலாம் எனவும் 3 அடி உயரமானதுடன், தொப்புலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளை நிறத்தைக் கொண்ட மரையொன்று, சிங்கராஜா காட்டுப் பகுதிக்குள் ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரையை, கிரிதல மிருக வைத்தியரிடம் கொண்டு செல்ல உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago