2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அர்ஜூன ரணதுங்கவின் திருகோணமலை விஜயம்

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, நேற்று வெள்ளிக்கிழமை (22) திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.

சீனக்குடாவில் உள்ள இலங்கை துறைமுக அதிகார சபை இறங்கு துறைக்குச் சென்ற அமைச்சர் அங்கு திருத்தியமைக்கப்பட்ட பாரஊர்தி நிறை அளக்கும் கருவியின் செயற்பாட்டினை பார்வையிட்டார். அதன் பின்னர் துறைமுக பகுதிக்கச் சென்று பார்வையிட்டதுடன் ஊழியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

திருகோணமலை துறைமுகத்துக்கு வந்து செல்லும் வாகனங்களின் நிறையை அளவிடும் கருவி மிக நிண்டகாலமாக பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருத்தி அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் கடந்த வருடம் 8மில்லியன் ரூபாய்கள் வருமானமாக கிடைக்கப்பெற்றது.

கடந்த காலங்களில் ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை ஆகிய துறைமுகங்கள், நட்டத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றில் காலித் துறைமுகம்  இலாபத்தில் இயங்க வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் அனைத்து துறைமுகங்களையும் இவ்வருடம் இலபத்தில் இயங்கவதற்கு ஏற்றவிதமாக வழி நடத்திச் செல்வோம் என்று அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .