2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அலைபேசியைத் திருடியவர் பயணிகளிடம் சிக்கினார்

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கண்டி இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணியொருவரின் பெருமதியான அலைபேசியைத் திருடிய இளைஞன் ஒருவரை, பயணிகள் மடக்கிப்பிடித்து, கந்தளாய்ப் பொலிஸாரிடம் இன்று (02) ஒப்படைத்தனர்.

திருகோணமலை, ஆண்டாம்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த இளைஞனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்லில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பெண்ணொருவரின் பையினுள் இருந்த அ​லைபேசியை, இளைஞன் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான இனைஞனை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்தது அலைபேசி மீட்கப்பட்டதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X