2025 மே 17, சனிக்கிழமை

அலுவலகத்தின் கண்ணாடிகள் சேதம்

Niroshini   / 2016 நவம்பர் 22 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - மொறவெவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உப அலுவலகத்தின் தொலைபேசி, கண்ணாடிகளை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் மதுபோதையில் சேதப்படுத்தியுள்ளர்.

இச்சம்பவம், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டில், அதே திணைக்களத்தில் கடமையாற்றும்  எஸ்.நிஹால் என்பவர் மதுபோதையில் அலுவலகத்தின் தொலைபேசி, கண்ணாடிகளைசேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .