2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அளவை, நிறுவை உபகரணங்களுக்கு முத்திரையிடப்படவுள்ளன

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை – தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை  ஆகிய இரு பிரதேசங்களிலும்  அளவை, நிறுவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, திருகோணமலை மாவட்ட அளவிட்டு அலகுகள், நியமங்கள், சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பி. ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை, தம்பலகாமம்   பிரதேச சபையின் உப அலுவலகமான முள்ளிப்பொத்தானைக் கட்டடத்தில்  காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரையும் அளவை , நிறுவை உபகரணங்களுக்கு  முத்திரை பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த இரு பிரதேசங்களிலுமுள்ள கடைகள், கூட்டுறவுச் சங்கங்கள், கமநல சேவைத் திணைக்களங்கள், வங்கிகளில் உபயோகிக்கும் சகல அளவை, நிறுவை உபகரணங்களையும் சரிபார்த்து முத்திரையிட்டு,  வியாபாரிகள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை சட்ட ரீதியாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .