அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மனித செயற்பாடுகளால் அழிவை எதிர்நோக்கி வரும் கண்டல் தாவரங்களை பாதுகாக்க, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டல் தாவரங்களின் மீள்நடுகை மற்றும் பாதுகாப்பு தொடர்பில், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அரச அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தல் நிகழ்வின்போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
'கண்டல் தாவரங்கள், சுற்றாடலுக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், அதன்மூலம் மனிதன், பொருளாதார ரீதியாக பல நன்மைகளை பெறுகிறான். இருப்பினும், ஒரு சிலரின் முறையற்ற செயற்பாடுகளால். கண்டல் தாவரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
'இலங்கையில் 14 கரையோர மாவட்டங்கள் காணப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் 5 பிரதேச செயலகப்பிரிவுகள் கரையோர பிரதேசங்களாக காணப்படுகின்றன. களப்பு உட்பட கண்டல் தாவரங்கள், யுத்த காலத்துக்குப் பின்னர் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
'கண்டல் தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் களப்பு பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம், பல நன்மைகளை அடையக்கூடியதாக இருக்கும்.
'எமது நாட்டில், இயற்கையாகக் கிடைக்கப்பெற்ற இவ்வளம், பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில்கூட கிடையாது. எனவே, இதனைப் பாதுகாத்து, உரிய பிரதிபலன்களை பெறவேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
25 minute ago
31 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
32 minute ago
37 minute ago