Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.கீத்
திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களும் பெற்றாரும், பாடசாலைக்கு முன்பாக இன்று (21) காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பாடசாலையில் கணித பாடம் கற்பித்துவந்த ந. சேயதாசன் என்ற கணிதப் பாட ஆசிரியரின் இடமாற்றத்தைக் கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆசிரியர், சிறந்த முறையில் கல்வி கற்பித்து வந்த நிலையில் அவரை இடமாற்றம் செய்தமையால் மாணவர்கள் கணிதப் பாடத்தில் வீழ்சியடையும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவரை மீள இப்பாடசாலைக்கே நியமிக்குமாறு, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றார் வேண்டுகோள் விடுத்தனர்.
இவ்விடயம் அறிந்த வலயக் கல்விப் பணிப்பாளர திருமதி அருளானந்தம், கோட்டக்கல்வி அதிகாரி கோ.செல்வநாயகம், உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.பிரபாகரன் உள்ளிட்ட குழுவினர் ஸ்தலத்துக்கு விரைந்து, பெற்றோருடன் பேச்சுவாரத்தை நடத்தியதுடன், கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் முத்துபண்டாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, மேற்படி நியாயமான கோரிக்கையை ஏற்று, குறித்த ஆசிரியரை மீள நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்படமையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago