எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ராஜகீய தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறுகோரி, பெற்றோரால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, இன்று (03) முன்னெடுக்கப்பட்டது.
கணிதம், விஞ்ஞானம், சித்திரம், புவியியல் பாடங்களைக் கற்பிப்பதற்கு, தேசிய பாடசாலையில் போதுமான ஆசிரியர்கள் இல்லையெனவும், இதனை நிவர்த்தி செய்யுமாறும் கோரியும், கொட்டும் மழை என்றும் பாராமல், பெற்றோர்கள், பாடசாலை முன்றலில் நின்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
திருகோணமலை பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
“ஆசிரியர்கள் இல்லை”, “உடனடியாக ஆசிரியர்களை நியமியுங்கள்”, “கல்வியை மாணவர்களுக்கு வழங்குங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் ஏந்தியிருந்தனர்.
17 minute ago
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
3 hours ago