தீஷான் அஹமட் / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளி ஆற்றங்கரையோரத்தில், ஆணொருவரின் சடலம், இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளதாக, சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேல் யோகராசா (வயது 34) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், நேற்று (23) காலை வீட்டிலிருந்த வெளியே சென்றுள்ளார். மாலையாகியும் வீடு வராததையடுத்து குடும்பத்தாரும், அயலவர்களும் அவரைத் தேடியபோது அவர் இறந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் அவயங்களில் காயங்கள் காணப்படுவதால் இவர் கொலை செய்யப்பட்டுப் போடப்பட்டிருக்கலாமென குடும்பத்தார், பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இவரது இறப்புக்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா என்பது தொடர்பில், சேருநுவரப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025