Editorial / 2018 மே 08 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா நகர சபை வளாகத்தில், பல ஆண்டுகாலமாக ஆபத்தான நிலையில் இருந்த பிரதான மின்மாற்றியை, வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள், நேற்று (07) வெற்றியளித்துள்ளன.
கடந்த மூன்று மாத காலமாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸின் முயற்சியால், இம்மின்மாற்றியை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபையில், நகர சபையின் செயலாளர் நௌபீஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, நகர சபை வளாகத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்படி மின்மாற்றியை மாற்றி, புதிய, ஆபத்தற்ற, நவீன வசதிகளைக் கொண்டுள்ள மின்மாற்றியை, நகர சபைக்கு வெளியில் வீதிக்கு அருகாமையில் நடுவதற்கான ஏற்பாடுகளை, மின் கம்பம் மூலமான ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கான, முழுமையான மின்மாற்றிக்கான வேலைத்திட்டம் மிக விரைவில் முடிவடையும் எனவும், கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
35 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
35 minute ago
37 minute ago
45 minute ago