தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 02 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டம் பகுதியில் அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு, வீதியால் சென்றவர்களுக்கு இடையூறு விளைவித்த, 40 வயது மதிக்கத்தக்க முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், நேற்றிரவு (01) கைது செய்துள்ளாரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர், மது அருந்திவிட்டு வீதியால் செல்கின்ற பொதுமக்களுக்கு தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்துக் குந்தகம் விளைவிப்பதாக, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், இவரை, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago