2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், நாளை (03) காலை 09 மணி தொடக்கம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் எம்.முபாரக் கூறினார்.

கடந்த வருடத்தைப் போல் இவ்வருடமும் தமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருடத்தின் ஆரம்ப நாள்களிலேயே உயர்ந்த தர்மமாகிய இரத்ததானத்தைச் செய்து தங்களது கடமைகளை மேற்கொள்ளும் உயர்ந்த நோக்குடனேயே, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுமக்களும் கலந்துகொண்டு, இரத்ததானம் செய்ய முடியும் என மூதூர் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .