Princiya Dixci / 2016 ஜூலை 02 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் இன்று சனிக்கிழமை (02) பிற்பகல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் வளைவொன்றில் வேகக்கட்டுப்பாட்டை மீறி மின் கம்பத்துடன் மோதியதில் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் திருகோணமலை-அன்புவெளிபுரம் பகுதியைச்சேர்ந்த சீ.தானியன் (வயது 17) மற்றும் கே.விதுஷன் (வயது 18) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, 03ஆம் கட்டைப் பகுதியில் முற்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கற்பிணித்தாயொருவர் காயமடைந்துள்ளார்.
இவர் நிலாவெளி-பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த யூ.பிரேமலதா (வயது 32) எனவும் முற்சக்கர வண்டியின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்துகள் தொடர்பாக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
21 Mar 2026