Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்
கிழக்கு மாகாண தொண்டராசிரியர் நியமனத்துக்கான நேர்முகத்தேர்வை நடத்துவதுக்கான இறுதித்தினம் இன்னும் முடிவு செய்யப்படவில்லையென, கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரவித்தார்.
இது தொடர்பில், நேற்று (25) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒக்டோபர் மாதம் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்று நியமனம் வழங்கப்படவுள்ளதாக சில பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரமாகியிருந்தது.
“உண்மையில் அந்தச் செய்தியில் குறுப்பிட்ட தினங்களில் நேர்முக்கத்தேர்வு நடைபெறாது என்பதையும் தொண்டர் ஆசிரியர்களை, சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காகத் தவறாக வழிநடத்த முற்படுகிறார்கள் என்பதையும் இங்கு பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
“கடந்த வருடம் மார்ச் மாதம் எனது ஏற்பாட்டில், கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பயனாகத் தொண்டராசிரியர் நியமனத்துக்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றது.
“அதன்பின்னர் இந்த நியமனத்துக்குத் தகுதியான தொண்டர் ஆசிரியர்களின் விவரங்களை எமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் தரும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய கல்வி அமைச்சில் நேர்முகத்தேர்வு நடத்தி நியமனம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
“ஆனாலும், கிழக்கு மாகாண கல்வியமைச்சால் எமக்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படத் தாமதமாகியதால், கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களின் நியமனம் இதுவரை தாமதமடைந்துள்ளது.
“அந்த வகையில், மாகாணக் கல்வியமைச்சில் இருந்து சில வாரங்களுக்கு முன்பாகவே தொண்டராசிரியர் தொடர்பாக நாம் கேட்ட தகவல்கள் அனுப்பி வைக்கபட்டுள்ளன. ஆகவே, இந்த தகவல்களை ஆராய்ந்து மிக விரைவாக தொண்டராசிரிர்களுக்கான நேர்முகத்தேர்வை நடத்த எதிர்பார்த்துள்ளோம்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago