2025 மே 14, புதன்கிழமை

இளம் பெண்களை ஒளிந்திருந்து பார்த்த இளைஞன் கைது

எப். முபாரக்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஆற்றில் நீராடிய  இளம் பெண்களை, ஒளிந்திருந்து பார்த்த இளைஞயொருவரை பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் ​தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

கந்தளாய் பகுதியிலுள்ள வயலாற்றில்  மாலை வேளையில் ஆண்கள், பெண்கள் நீராடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று (19) மாலை 5 இளம் பெண்கள் ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது, ஆற்றுக்கு அருகிலுள்ள காட்டில் நபரொருவர் ஒளிந்து பார்த்துக்கொண்டிருப்பதைக்  கண்ட, அதிலுள்ள ஒருப் பெண் கூட்சலிட்டுள்ளார்.

இதன்பின்னர் பிரதேச மக்கள் சந்தேகநபரை சுற்றிவளைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கந்தலாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X