2025 மே 14, புதன்கிழமை

இளைஞனைத் தாக்கிய மூவருக்கு மறியல்

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இளைஞர் ருவரைப் பொல்லால்  தாக்கிய ஈச்சிலம்பற்று, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 23, 25, 26 வயதுடைய மூவரை, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான், நேற்று (01) உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் மூவரும் இணைந்து ஒளிந்து நின்று, இளைஞனைப் பொல்லால் தாக்கினரென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும், பழைய பகைமையே இத்தாக்குதலுக்குக் காரணமெனவும், சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .