2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உணவக உரிமையாளர்களுக்கு தண்டம்

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதியின்றி உணவகத்தை நடத்திச் சென்ற உணவக உரிமையாளருக்கு, 15 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும், 14 நாள்களுக்கு கடையை மூடுமாறும் திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இவ்வழக்கு, பிரதம நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில், இன்று (11) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இக்கட்டளை  பிறப்பிக்கப்பட்டது.

உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பாலையூற்று சுகாதார பரிசோதகர் டி. தவராஜசேகர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் சுகாதாரத்தின் தரத்தை பேணாமல், சுகாதார வைத்திய பணிமனைக்கு தெரியாமல் உணவகங்களை நடத்தி சென்ற உணவக உரிமையாளருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, இன்னுமொரு உணவகத்தை அனுமதிப்பத்திரமின்றி நடாத்தி சென்றமைக்கு 5,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் தொடர்ந்தும் உணவகத் நடத்தி சென்றால் 06 மாத கால சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் எனவும், நீதவான் எச்சரிக்கை செய்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X