Thipaan / 2016 ஜூன் 28 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் உபாலி சமரதுங்கவை, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, இன்று செவ்வாய்க்கிழமை (28) உத்தரவிட்டார்.
திருகோணமலையிலுள்ள கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்கள களஞ்சியசாலையில், மீனவர்களுக்கு வழங்கப்படவிருந்த 4 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் காணாமல் போனதாக களஞ்சியப் பொறுப்பாளரால் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உபாலி சமரதுங்க, இன்று 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதவான் டி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது, பிணை வழங்குமாறு அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணியால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பொதுச் சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின்படி, நீதவான் நீதிமன்றத்துக்;கு பிணை வழங்க அதிகாரம் இல்லையெனத் தெரிவித்த நீதவான், அதற்குரிய அதிகாரம் உள்ள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago