Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
தேசிய எச்.ஐ.விஃஎயிட்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகளைத் தெளிவுபடுத்தும் ஒன்று கூடல், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (21) காலை 9.00மணியளவில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண எச்.ஐ.வி எயிட்ஸ் இணைப்பாளர் சத்தியா ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், சிறைச்சாலை, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகள் மற்றும் மாவட்ட ரீதியில் எயிட்ஸின் தாக்கம் போன்ற விடயங்கள் தரவுகளோடு தெளிவுபடுத்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தின் எச்.ஐ.வி எயிட்ஸ் விரிவாக்கல் குழுவொன்றும் இதன் போது தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
3 hours ago