2025 மே 19, திங்கட்கிழமை

உயிரிழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வேண்டும்

Princiya Dixci   / 2016 ஜூலை 28 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

கடந்தகால யுத்த சூழ்நிலையின்போது, உயிரிழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனக் கூறியும் தங்களுக்கு  நிரந்தர வாழ்வாதார உதவிகள் செய்து தரப்பட வேண்டுமெனக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மூதூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட இறுதியில் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

இந்த மகஜரை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் மூதூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது 'யுத்த நிறைவில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே', 'அரசே எமது பிள்ளைகள் எப்போது திரும்பி வருவார்கள்', 'அரசே எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?', 'உண்மை எப்போது எமக்குத் தெரியும்' உள்ளிட்டவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X