அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் மணியரசன் குளத்தில் நீர் வெளியேறும் பகுதியில், நீரில் மூழ்கி உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்று (12) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, சடலமும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, மணியரசன் குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சபுறுள்ளா சதாம் (21 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், கடந்த 6 நாட்களுக்கு முன்னர் கிண்ணியா - குரங்கு பாஞ்சான் பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லையென குடும்பத்தினர், முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்று, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .