2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

உலக உணவு தினத்தையொட்டி விழிப்பூட்டும் ஊர்வலம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

உலக உணவு தினத்தையொட்டி, சுத்தமான உணவுகளை உண்பது தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் ஊர்வலம், மூதூரில் இன்று (16) இடம்பெற்றது.

மக்கள் திட்ட அமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வூர்வலம், மூதூர் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து ஆரம்பமாகி, மூதூர் பிரதான வீதி, மார்க்கட் வீதியூடாகச் சென்று ஆரம்ப இடத்தை வந்தடைந்தது.

இவ்வீதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர், 'நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்ய முயற்சிப்போம், நஞ்சற்ற உணவுகளை உண்போம், சுகாதாரப் பழக்க வழக்கங்களை மேம்படுத்துவோம், சுத்தமான குடிநீரைப் பருகுவோம், கடல் வளத்தைப் பாதுகாப்போம், விவசாய நீர்ப்பாசன முறையை சீர்படுத்துவோம்' போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு இவ்வீதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X