Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினால் கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமாம் பெறும் குடும்பங்களுக்கு கிழமைக்கு ஒரு தடவை உலருணவுப் பொருள்களை வழங்கி வருவதாக, கந்தளாய் பிரதேச செயலாளர் என்.எம்.உபேக்சா குமாரி தெரிவித்தார்.
கந்தளாயில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பாக நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
“அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சஹன உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உலருணவுப் பொருள்களையும் வழங்கி வருவதோடு, இத் திட்டங்களுக்கு எமது உத்தியோகத்தர்கள் சிரமம் பாராது கடமையாற்றி வருகின்றார்கள்.
“அதேபோன்று எமது பிரதேசத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மிகவும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு பல வழிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். கிராம சேவர் அதிகாரிகள் ஊடாக உலருணவுப் பொருட்ள்களையும் வழங்கி வருகின்றோம்.
“பிரதேசத்தில் வருமானம் உடைய, அதேபோன்று நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் போன்றவர்களின் உதவிகளையும் பெற்று செயற்பட்டு வருகின்றோம். மேலும், பிரதேசத்தில் உள்ள மதஸ்தலங்களுக்கும் உலருணவுப்பொருட்ள்களை வழங்க உத்தேசித்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .