2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உளவியல் ஆலோசனை மய்யம் ஓராண்டு பூர்த்தி விழா

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

உளவியல் ஆலோசனை மய்யம்,  தனது ஓராண்டு பூர்த்தி விழாவை, மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் அமைந்துள்ள கிரிபோஜன் மண்டபத்தில் நேற்று (04)   கொண்டாடியது.

இந்த நிகழ்வில்,  மட்டக்களப்பு, திருகோணமலை  உளவியல் ஆலோசனை மய்யத்தின் உறவுகள்,  குடும்ப சகிதம் கலந்துகொண்டர்கள்.

மக்கள் மத்தியில் உளரீதியான பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கான உளவியல் ஆலோசனை தேவையாகக் காணப்பட்ட நிலையில் மக்களுக்குப் பணியாற்றும் நோக்கத்துக்காக இம் மய்யம் ஆரம்பிக்கப்பட்டது  என்றும்  உளவியல் ஆலோசனை மய்யத் தோற்றம் பற்றிய விளக்கத்தை உளவியல்  ஆலோசனை மய்ய மட்டக்களப்புப்  பணியாளர்  ரணிசிய  வழங்கினார்.

ஒரு வருட காலத்தில் சிறந்த முறையில் உளவியல் ஆலோசனை மய்யத்தில் பணியாற்றியவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .