எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு, இது தொடர்பான கொள்கைகளையும் கருத்துகளையும் முன்மொழியுகளையும் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, திருகோணமலை நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்துதல், மூதூர் பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதல், கந்தளாய் பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதல், திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதியை கிண்ணியா நகர சபையுடனும், உப்பாறு கிராம சேவகர் பிரிவின் மற்றொரு பகுதியினை கிண்ணியா பிரதேச சபையுடனும் இணைத்தல், திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாரப்பற்று என புதிய பிரதேச சபை ஒன்றை ஸ்தாபித்தல் தொடர்பாகக் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.
கருத்துகளை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தலைவர் அல்லது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளர், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான குழு, அரசாங்க அதிபர் காரியாலயம், திருகோணமலை எனும் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பி வைக்க முடியும்.
அத்துடன், 026-2222235 தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது 026-2222305 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ அல்லது mcucps@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .