2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு பொருள்கள் வழங்கல்

Editorial   / 2020 ஜூன் 18 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

கொரோனா அசாதாரண காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களைக்  கௌரவிக்கும் முகமாக,  திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தால், அன்பளிப்புப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதம குருக்களும் ஆதீன கர்தாவுமாகிய பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்களால், கோவிலின் திருமண மண்டபத்தில் வைத்து, இந்த அன்பளிப்புப் பொருள்கள், இன்று (18) வழங்கப்பட்டன.

திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவையின் வேண்டுகோளை ஏற்று தெரிவுசெய்யப்பட்ட 25 ஊடகவியலாளர்களுக்கு தலா 2,100 ரூபாய் பெறுமதியான அன்பளிப்பு பொருள்கள் வழங்கி இதன்போது வழங்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X