Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், எஸ், சசிகுமார்
ஊடகவியலாளரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டுக்காக, திருகோணமலை கடற் படைத் தள வீதியிலுள்ள ஹோட்டலின் முகாமையாளரும் தொழில் புரியும் சிப்பந்தி ஒருவரும், நேற்றுப் புதன்கிழமை (16) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொது சுகாதார அதிகாரிகளால், செவ்வாய்க்கிழமை (15) இந்த ஹோட்டல் சோதனையிடப்பட்டபோது, அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரைத் தாக்குவதற்கு சிலர் முயன்றதுடன், அவரது வீட்டுக்கும் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பில், அந்த ஊடகவியலாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே, இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலை, புதன்கிழமை (16) முதல் ஒருவாரத்துக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டபோதும், வழமைபோல் ஹோட்டல் திறக்கப்பட்டிருந்ததையடுத்து, ஹோட்டலை ஒருமாதத்துக்கு மூடுமாறு, பொதுச் சுகாதா அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .