2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

எரிபொருள் நிரப்பியவர் தகராறு: மூவர் மீது தாக்குதல்; ஒருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய மூவர், நேற்று  (01) இரவு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என, அந்நிலையத்தின் முகாமையாளர் செந்தூர் குமரன் தெரிவித்தார்.

தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக, மதுபோதையில் சென்றிருந்த 35 வயது நபரொருவர், 1000 ரூபாய்க்கு பெற்றோலை நிரப்பிக்கொண்டதன் பின்னர், பெற்றோலுக்கான ஆயிரம் ரூபாயை, ஏற்கெனவே எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடம் கொடுத்துவிட்டதாகக் கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், அந்நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த 48, 59 வயதுடைய ஊழியர்களையும் 37 வயதுக் காவலாளியையும், அவர் தாக்கியுள்ளாரென, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேற்படி நபரை, திருகோணமலைத் தலைமையகப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், திருகோணமலை நகரில் வசித்துவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் எனவும் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .