2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எழுத்தாணிக்கான அலுவலகம் திறப்பு

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்,  எப்.முபாரக்

ஊடகத்துறை, இலக்கியத்துறை, சமூகசேவைகள் எனும் மூன்று பிரிவுகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவை, தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தை, திருகோணமலை மின்சார நிலைய வீதி நேற்று (27) திறந்து வைத்தது.

இந்த விழாவில் அதிதிகளாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி ஜீவிதன் சுகந்தினி, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கோணேஸ்வரன், திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உப தலைவர் கா.கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரும் தளமாகவும், ஊடக மாநாடுகள் நடத்தவும் இவ்அலுவலகம் எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாக, எழுத்தாணி கலைப்பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X