Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணாமலை, கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஏழாயிரம் கிலோகிராம் மரக்கறிகள், அழுகிய நிலையில், இன்று (15) மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், புகைப்படம் எடுக்கம் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காகக் கொண்டுச்செல்லப்பட்ட மரக்கறிகளே, கந்தளாயிலுள்ள எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன நகர மண்டபத்திலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட மரக்கறிகளில், கரட், கோவா, ராபு, லீக்ஸ், பூசனிக்காய், போஞ்சி போன்ற மரக்கறிகள் அதிகம் காணப்பட்டன என்றும் இவை சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம், முறையாக முன்னெடுக்கப்படாததால், மரக்கறிகள் பிரயோசனமற்று போயுள்ளன என்று, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அழுகிய மரக்கறிகள் தொடர்பாக படம் எடுப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக தெரியவருகிறது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .