Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 16 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சியை, இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் சரி செய்வோமென, அக் கட்சியின் சார்பில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானையில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில், தொலைபேசி அணியினர், சுயேட்சைக் குழுவென்று, ஐ.தே.கவை விமர்சிப்பது சிறுபிள்ளை தனமான அரசியலாகும் என்றார்.
அத்துடன், நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் அல்ல என்றும் ஆனால், திருகோணமலையில் சிறுபான்மை சமூகத்துக்காக கட்சியை உருவாக்கி, சட்டரீதியாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசியலுக்கான அனுமதி காரணமாகவே, இக்கட்சியில் களமிறங்கியுள்ளேன் என்றார்.
சிலர் ஐ.தே.கவை விமர்சிக்கிற போதும், சிறுபான்மை இனத்தை பாதுகாக்கக் கூடிய ஆளுமை உள்ள சக்தியாக அது உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago