2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஒருவரைத் தாக்கியவருக்கு கட்டாயச் சிறை

எப். முபாரக்   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஒருவரைத் தாக்கி காயமேற்படுத்திய நபரொருவருக்கு ஒரு மாத கால கட்டாயச் சிறைதண்டனை விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (16) உத்தரவிட்டார்.                

அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு,  4,500 ரூபாய் நஷ்டஈடு  செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம், குடும்பங்களுக்கிடையிலான காணி பகிர்வின் போது ஏற்றபட்ட தகராறில், ஒருவரைத் தாக்கி காயமேற்படுத்திய நிலையிலே, குறித்த நபருக்கெதிராக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், அந்நநபரைக் குற்றவாளியாக இனங்கண்ட  நீதவான், சிறைத்தண்டனையும் நட்டஈடும் விதித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X