2025 மே 05, திங்கட்கிழமை

’ஒரே நாடு, ஒரே சட்டம் ஒரு பகுதியினருக்கா?’

Princiya Dixci   / 2020 நவம்பர் 22 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்

நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமா “ஒரே நாடு, ஒரே சட்டம்” என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கேள்வி எழுப்பினார். 

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “இன்று அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறினாலும் ராஜபக்ஷ சகோதரர்களின் ஆதரவாளர்களுக்கு  ஒரு சட்டமும் ஏனையவர்களுக்கு இன்னொரு சட்டமுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது” எனச் சாடினார். 

“மாவீரர் நினைவு தினத்துக்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன. ஆனால், மக்கள் விடுதலை முன்னணியினர் இதுபோன்ற நினைவு தினம் அனுஷ்டித்திக்கும்போது, எந்தவோர் எதிர்ப்பும் வெளியிடப்படவில்லை.

“அதேபோன்று, கொரோனா அச்சத்தால் நாட்டின் பல பகுதிகளில் வணக்கஸ்தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, மூடப்பட்டுள்ள வணக்கஸ்தலங்களை திறந்து, அவருக்கு ஆசி வேண்டி வழிபாடுகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

“சிறுபான்ன்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சட்டங்கள், பெரும்பான்மையினரைக் கட்டுப்படுத்துவதில்லை” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X