Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்டபெரியபாலம் பகுதியில் மாடு ஒன்றுடன் ஓட்டோ மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் இருவர், மூதூர் தள வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்றையவர் தொடர்ந்தும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார் என, மூதூர் பொலிஸார் தெரிவித்தார்.
நேற்று (10) இரவு இடம்பெற்ற இந்த விபத்துக் குறித்துத் தெரியவருவதாவது,
கிண்ணியாவில் உள்ள பாடசாலையில் க.பொ.த பரீட்சை மேற்பார்வைக்காக ஓட்டோவில் சென்ற இவ் ஆசிரியர்கள், கடமையை முடித்து விட்டு, தோப்பூர் நோக்கி வரும்போது, இவர்கள் பயணித்த ஓட்டோ, வீதியில் நின்ற மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பின்னால் வந்த டிப்பரொன்று, ஓட்டோவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த எம்.பௌசுல் அமீர் (வயது 57), ஏ.ஆர். பைஸர் (வயது 33) எம்.தாஜுன் (வயது 50) இவர்கள் மூவரும், தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபத்துக் குறித்து, மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .