Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணமானது முதலீட்டுக்கு தேவையான பல வசதி வாய்ப்புக்களைக் கொண்டு காணப்படுவதுடன், அதிகமாக பயன்படுத்தப்படாத காணிகள் வெறுமனே இருக்கின்றமையானது, முதலீட்டு செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக அமைகின்றது என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோரோகித போகொல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஓய்வூதிய தின நிகழ்வுகள் ,திருகோணமலை மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.புஸ்பகுமார தலைமையில் இன்று (08) நடைபெற்றப் போது அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஓய்வூதியம் பெற்றவர்கள் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உங்களுடைய பங்களிப்பை வழங்குதல் வேண்டும். விசேடமாக தனியார் துறையில் இணைந்து செயற்படல் மற்றும் காத்திரமான தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் இச்செயற்பாட்டை மேலும் வலுவுள்ளதாக மாற்ற முடியும்.
உள்ளுராட்சி மன்றங்களை மேற்பார்வை செய்வதற்கு குழுவொன்று அவசியமாகும்.
சில உள்ளுராட்சி மன்றங்களில் ஒளிராமல் இருக்கின்ற மின் விளக்குகளை மாற்ற முடியாமல் இருக்கின்ற செயலாளர்கள் இருக்கின்றப் போது, அப்பிரதேசத்தினுடைய ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்து தீர்க்க முடியும்.
உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்குகின்ற சேவையை மகத்தான சேவையாக மாற்றியமைக்க, இம்மேற்பார்வைக் குழுவுக்கு பல்துறைச்சார் உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.
உலகிலே தற்கொலை முயற்சிகளை அதிகளவில் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் காணப்படுகின்றது. இதில் கிழக்கு மாகாணம் முதன்மை பெற்று காணப்படுகின்றமையானது கவலையளிக்கின்றது.
ஆதலால், இந்நிலையை மாற்றியமைக்க ஒவ்வொரு பிரசே செயலக ரீதியாக உளநலப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதனை முன்னெடுக்க துறை சார் நிபுணர்களுடைய ஒத்துழைப்பும் தேவை என, போகொல்லாகம தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொது நிர்வாக முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபே குணவர்தன மற்றும் ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகள் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago