2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெறவுள்ளவர்களுக்கான நடமாடும் சேவை

Thipaan   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து ஓய்வு பெறவுள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சுயவிபரக் கோவையில் உள்ளதன் பொருட்டு, இவ்வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒரு நாள் நடமாடும் சேவையொன்றினை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசுவர்கான் தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் சேவை கிண்ணியா வலயக் கல்விப் பதிப்பாளர் ஏ.நசுவர்கான் தலைமையில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில், எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் ஓய்வு பெறவுள்ளோர்கள் தவறாது சமூகமளித்து ஓய்வு பெறுவதற்கான தேவையான ஆவணங்களை வழங்கி உதவுமாறும் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .