2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

தீஷான் அஹமட்   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் காட்டுப்பகுதியில், இன்று (23) அதிகாலை, இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டனர் என, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஒரு கசிப்பு நிலையத்தில் 7,500 மில்லிலீற்றர் கசிப்பு, 15,000 மில்லிலீற்றர் கோடா ஆகியன கைப்பற்றப்பட்டதுடன், 24 வயதுடைய சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மற்றைய கசிப்பு உற்பத்தி நிலையத்தில் 6,000 மில்லிலீற்றர் கசிப்பு, 2,500 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றுடன், 20 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாரென, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X