தீஷான் அஹமட் / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

செல்வநகர், களப்புக் கடலை அண்டிய காட்டுப்பகுதியில் இயங்கி வந்த கசிப்பு காய்ச்சும் நிலையமொன்று, நேற்று முன்தினம் மாலை முற்றுகையிடப்பட்டதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டாரெனவும் கசிப்பு மற்றும் கசிப்புக் காய்ச்சப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புத்திக்க ராஜபக்ஷ தெரிவித்தார்.
29 போத்தல் கசிப்பு, 3 இலட்சத்து 5,000 மில்லி லீற்றர் கோடா, வயர், பரல்கள் உள்ளிட்ட பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, குறித்த காட்டுப் பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர், சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .