ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, நடுத்தீவு சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் கேரள கஞ்சா போதைப் பொருட்களை வைத்திருந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரொருவர், இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார் என, திருகோணமலை பிராந்திய நச்சுத் தன்மையான போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனிடமிருந்து 10 கிராம் கஞ்சா கோப்பியும் ஒரு கிராம் கேரளா கஞ்சாவும், ஒரு கட்டு லேகியமும் கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் இன்று (13) நண்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டவரை, மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .