Editorial / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, சல்லிக்கலப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெற்று வருவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், நேற்றிரவு (13) 10 மணியளவில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் அவரிடமிருந்து 48 கிராம் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பலமுறை அவர் தப்பிச்சென்றுள்ளாரெனவும் நேற்று முன்தினம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன், இளைஞன், கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரெனவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. விஜேயசிங்க தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago