2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சா செடிகளை வளர்த்தவருக்கு அபராதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஆறாம் கட்டைப் பகுதியில் மூன்றரை அடி உயரமான கஞ்சா செடிகளை வளர்த்துவந்த  இளைஞனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று (11) உத்தரவிட்டார்.

நீதவான் முன்னிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபருக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபர், நிலாவெளி, ஆறாம்கட்டை  பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரென, நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .