2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சரீரப் பிணை

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கோணேசபுரிப் பகுதியில்  ஒரு பக்கெட் கஞ்சாவைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு,  திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக், இன்று (22) உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், நிலாவெளி, கோணேஸபுரிப் பகுதியைச் சேர்ந்த 21 வயது உடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன், பொலிஸார் பயணித்துக் கொண்டிருந்த போது, பொலிஸாரைக் கண்டு பயந்து ஓடிய போது, துரத்திச் சென்ற பொலிஸார், இளைஞனை  சோதனையிட்டபோது, இளைஞனிடம் இருந்து ஒரு பக்கெட் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட இளைஞனை, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவானின் வாசஸ்தலத்துக்கு இன்று பிற்பகல் அழைத்துச் சென்ற போது, ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புடைய செல்லுமாறும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்துக்குச் சமுகமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த இளைஞர் தொடர்பாக ஏற்கெனவே வழக்குகள் உள்ளதா  என அடுத்த வழக்குத் தவணைக்கு  வரும்போது, அறிக்கை ஒன்றை கொண்டுவருமாறும்   நீதவான், பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .