Princiya Dixci / 2016 மார்ச் 31 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் ஐந்நூறு மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.
கந்தளாய், ரஜஎலப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், மீன் வியாபாரியெனவும் மீன் வாங்குவதற்காக கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதிக்குச் சென்ற போது கைதுசெய்ததாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago