2025 மே 21, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மே 16 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

தலா ஐந்து  கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது  செய்யப்பட்ட கிண்ணியா - வான்எல  பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் மஹியங்கனைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் தலா 3,500 ரூபாய் அபராபதம் இன்று கந்தளாய் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

குறித்த இரு நபர்களையும் கிண்ணியா,வான்எல   பொலிஸார்  கைது செய்து இன்று கந்தளாய்  நீதவான் நீதி மன்றத்தில ஆஜர்படுத்தியபோதே நீதவான் தம்பிகயினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அவதானித்து அவர்களை     சோதனை மேற்கொண்ட போதே, கஞ்சா கைப்பபற்றப்பட்டது எனவும் சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .