Princiya Dixci / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் 2 கிராம் கஞ்சா வைத்திருந்த ஒருவரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)உத்தரவிட்டுள்ளார்.
பொலன்னறுவை புதிய நகரப் பகுதியைச் சேர்ந்த வீரகே கென்றி லஸ்மன் (வயது 35) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சைநூல் பகுதியில் மூதூர் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, மணல் ஏற்றுவதற்குச் சென்றிருந்த லொறி சாரதியையே கஞ்சாவுடன் சனிக்கிழமை (16) மாலை கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
23 minute ago
42 minute ago